இலங்கை பொலிஸ் திணைக்களகத்தின் 151 வது வருட நிறைவை முன்னிட்டு கெளரவ நிகழ்வு!

இலங்கை பொலிஸ் திணைக்களகத்தின் 151 வது வருட நிறைவை முன்னிட்டு வவுனியாவில் குற்றங்களை கட்டுப்படுத்த சிறப்பாக செயல்ப்பட்ட பொலிசாரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (06) காலை 11.00 மணிக்கு வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரைக்கு அமைவாக உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெனாண்டோ தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கடந்த மாதத்தில் குற்றங்களை கட்டுப்படுத்த சிறப்பாக செயல்ப்பட்ட பத்து பொலிசாருக்கு பணப்பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து கடமையிலிருக்கும் பொது உயிர்த்தியாகம் செய்த பொலிசாரின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் கேட்டறிந்து கொண்டதுடன் அவர்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.