1972 ம் ஆண்டு சிறைச்சாலை நண்பர்கள் இன்று சந்திப்பு!! ஒருவர் இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மற்றவர் சாதாரண குடிமகன்!!!


இலங்கை ஜனாதிபதியாக அதிமேதகு மைத்திரிபால சிறி சேன பதவியேற்றபின்னர்தான் தானும் அவரும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டு நட்பு பாராட்டிய விடயம் நினைவில் வந்தது என்கிறார் மட்டக்களப்பு வெல்லாவெளியை சேர்ந்த திரு தவசிப்பிள்ளை அழகானந்தம்.


1972ம் ஆண்டு காலப்பகுதியில் ஜே.வி.பி  சேகுவாரோ புரட்சி ஏற்பட்ட போது இளைஞர்கள் அரசியல் கைதிகளாக்கப்பட்டனர் அந்த சமயத்தில் மட்டக்களப்பு வெல்லாவெளிக் கிராமத்தை சேர்ந்த திரு தவசிப்பிள்ளை அழகானந்தம் என்பவரும் கைதாகி மட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார் அதே வேளை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவும் அங்கே அரசியல் கைதியாக சிறையிலிருந்தார் இந்த வேளையில்தான் இருவரும் அறிமுகமானார்கள். 

இவர்கள் இருவரும் ஒரே அறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார்கள் ஆளுக்காள் தத்தமது மொழிகளை கற்றுக் கொடுத்து கற்றுக் கொண்டார்கள் இவ்வாறு தொடர்ந்த நட்பு இவர்கள் விடுதலையானதும் பின்னர் தொடரமுடியாததொன்றாகி விட்டது.

பின்னர் நீண்ட பெரும் இடைவெளியின் பின்னர் பல தடைகளுக்கு மத்தியில் இன்று பொலன்னறுவை விஜயம் செய்த அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேனவை சந்திக்கும் பாக்கியம் கிட்டியதாக எமது மாருதம் செய்தியாளரிடம் கூறினார்.

இது இவ்வாறிருக்க எமது மட்டு மண்ணுக்கு இந்த நட்பு ரீதியான சந்திப்பு எதிர்வரும் காலங்களில் பல நன்மையான விடயங்களை ஏற்படுத்துமென மற்றைய பொதுமக்கள் அவதானிகள் பெருமிதப்படுகின்றனர் அங்கே சிங்கள மொழி ஊடகமமான திவயின செய்தி நிருபர்களும் அவரை சூழ்ந்து கொண்டமையும் இங்கே குறிப்பிடத் தக்கது.

எது எவ்வாறோ தனது நீண்ட கால கனவு நனவாகியதையிட்டு மிக மகிழ்வுடன் காணப்பட்டார் திரு அழகானந்தம் அவர்கள்.

இருவரும் நேருக்கு நேர் சந்தித்து குசலம் விசாரித்து மகிழ்ந்த போது 


VIP இருக்கையில் திரு அழகானந்தம் அவர்கள் அமரவைக்கப்பட்டுள்ளார்

No comments

Powered by Blogger.