ஃபேஸ்புக்கில் பிளாக் செய்யவே முடியாத இரண்டு கணக்குகள்


உலகின் முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் பிளாக் செய்யவே முடியாத இரண்டு கணக்குளை பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் கணக்கினை முடக்கவே இயலாது.

ஃபேஸ்புக்கில் பிளாக்
உங்கள் விருப்பமில்லாத நண்பர் மற்றும் உறவினர் என எந்த நபரின் கணக்குகள் மற்றும் பக்கங்களை நீங்கள் காணாத வகையில் பிளாக் செய்ய இயலும் ஆனால் உங்களால் இருவரின் பக்கங்களை மட்டுமே பிளாக் செய்ய இயலாத வகையில் தனது இணையம் மற்றும் செயலியை இந்நிறுவனம் வடிவமைத்துள்ளது.


ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க் அவரின் அதிகார்வப்பூர்வ பக்கம் நீங்கள் பிளாக் செய்ய முயற்சித்தால் கீழே உள்ள படத்தில் உள்ளதை போன்று உங்களால் தடை செய்ய இயலாது என்றே தோன்றும். அதே போல அவருடைய மனைவி பிரிசில்லா சான் புரஃபைலும் உங்களால் தடுக்க இயலாது என தெரிய வந்துள்ளது.இதுகுறித்து பேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறுகையில் " ஒருவரின் சுயவிவரம் அல்லது பக்கத்தைத் தடுக்க முயன்றால் குறுகிய காலத்திற்குள் பல தடவைகள் தடுக்க முயற்சித்தால் பிழை செய்தியைக் காணலாம்" இதுதவிர ஜுக்கர்பெர்க் மற்றும் சான் விவரங்கள் பேஸ்புக் பயனர்கள் அவற்றை தடுக்க முயற்சித்தால் எப்பொழுதும் தோன்றும் என தெரிவித்துள்ளார்.

ஆனால் ஃபேஸ்புக் நிறுவனரின் செல்ல நாய்க்குட்டி பீஸ்ட், அவருடைய சகோதரி, தாய், தந்தையர் கணக்குகள் மற்றும் மற்ற பிரபலங்கள் கணக்குகளை எந்த பிரச்சனையும் இல்லாமல் முடக்கலாம்.

No comments

Powered by Blogger.