துறைநீலாவணை பொதுமயானத்தில் பாரிய டெங்கு சிரமதானம்

[க.விஜயரெத்தினம்]

துறைநீலாவணை கிராமத்தில் உள்ள பொது மயானம் இன்று(1.9.2017) காலை 7.30 முதல் 9.00 மணிவரையும் பாரிய டெங்கு சிரமதானம் நடைபெற்றது.துறைநீலாவணை கிராமத்தில் உள்ள நான்கு கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வறுமைப்பட்ட பொதுமக்களினால் துப்பரவு செய்யப்பட்டது.

சுமார் 1500 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்குபற்றினார்கள்.துறைநீலாவணை கிராமத்திற்கு பொறுப்பான கிராம சேவையாளர்களான தி.கோகுலராஜ்,வ.கனகசபை ஆகியோர்களின் துரித முயற்சியினால் இச்சிரமதானம் ஒழுங்கு செய்து நடைபெற்றது.பொதுமக்கள் கத்தி,மண்வெட்டி, குப்பைவாரி கொண்டு செய்தார்கள்.

சுமார் இரண்டடி நீளமான பற்றைக்காடுகள் வளர்ந்து கல்லறைகளையும்,புதைகுழிகளையும் மூடிக்காணப்பட்டது.இதனைக் கருத்திற்கொண்டே இரு கிராமசேவையாளர்களும் இதனை ஒழுங்கு செய்தார்கள்.பற்றைக்காடுகள் பொதுமயானத்தில் வளர்ந்து காணப்படுவதால் இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு வரும் பொதுமக்களுக்கு பாரியதொரு இடையூறாக திகழ்ந்தது.இதனை கருதிற்கொண்டு இச்சிரமதானம் ஒழுங்கு செய்து நடைபெற்றது.இதனால் பொதுமயானம் துப்பரவுமிக்கதாக காணப்படுகின்றது.

No comments

Powered by Blogger.