மட்டு- ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் நடைபெற்ற பூரணை தின மகா யாகத்தின் புகைப்படத் தொகுப்பு!

மட்டக்களப்பு பெரிய. உப்போடையில் அமைந்துள்ள ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் பௌர்ணமி தினமான இன்று உலக சேமத்துக்காக ஆன்மீகக் குரு மகா யோகி திரு எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ்ந்திருக்க காயத்திரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் தெய்வீகத் திருப்பாதங்களுக்கு பாதாபிஷேகம் பின்னர் பதினெட்டு பூரணகும்பம் வைக்கப்பட்டு பதினெட்டு சித்தர்களையும் ஆவாகனம் செய்து அவர்கள் திருநாமம் கூறி அழைத்து அவர்கள் அனைவரது அருளாசியினோடும் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட சக்தி வாய்ந்த உயிர் மூலிகைகள் சஞ்ஜீவினி மூலிகை இதர மூலிகைகள் இடப்பட்டு காயத்திரி மகா மந்திரம் மிருத்தியுஞ்ஜெய மகா மந்திரம் தன்வந்திரி மகா மந்திரம் ஏனைய மகா மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டு மகா யாகம் நடை பெற்றது.

யாகத்தினைத் தொடர்ந்து சுவாமிகளின் ஆன்மீக அருளுபதேசம் இடம்பெற்றது
யாகம் அந்த யாகத்தின் பயன்கள் மனிதன் புனிதனாக வாழ்வது எப்படி இயற்கையின் சமநிலையை பேணுவதெப்படி உயிர் கொல்லும் நோய்களிலிருந்து விடுபடுவது எவ்வாறு தானும் சுகமாக வாழ்ந்து பிறரையும் சுகமாக வாழ வைப்பது எப்படி தர்மம் என்றால் என்ன அதர்மம் என்றால் என்ன இவ்வாறாக பல அரிய ஆன்மீக இரகசியங்களை பாமரருக்கும் புரியும் விதத்தில் நவீன யுகத்திற்கு ஏற்றால்போல் மிகத் தெளிவாக விஞ்ஞானத்திற்கும் எட்டாத பல விடயங்களை மக்களுக்கு உபதேசித்தருளினார்.

அருளுபதேசத்தின் பின்னர் அன்னதானமும் பிரசாதம் வழங்கி வைக்கப்பட்டது பக்தர்கள் முழுத் திருப்தியோடும் மன மகிழ்ச்சியோடு சென்றதை காணக்கூடியதாக இருந்தது.


No comments

Powered by Blogger.