களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் விசேட நிபுணர்களினால் இலவச கண் சிகிச்சை முகாம்!!

                                                                                                      -துறையூர் தாஸன் -
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இன்று 02/09/2017 தொடக்கம் 04/09/2017  மூன்று நாட்களுக்கு விசேட வைத்திய நிபுணர் Dr. ராதா நாகரெட்ணம் அவர்களினால் அப்பிரதேச பயனாளிகளுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலை நிர்வாகத்தோடு இணைந்து வைத்திய அதிகாரி திரு.DR.சுகுணன் அவர்களின் தலைமையில் இணைந்து நடாத்தப்படுகிறது. 

இந்த இலவச வைத்தியப் பரிசோதனை பற்றி வைத்திய அதிகாரி DR.சுகுணன் கூறுகையில்.....

களுவாஞ்சிகுடியில் இதே வைத்தியசாலையில் பிறந்து பிரித்தானியாவில் சூழ்நிலை காரணமாக வாழ்ந்து வந்தாலும் எத்தனைபேர்தான் இவரைப்போல் இங்கு வந்து தாய்வீட்டு பங்களிப்பை செய்கிறார்கள். 

அந்தவகையில் போற்றப்பட வேண்டியவர் DR.ராதா நாகரெட்ணம் இருநூறு பேருக்கு அதிகமானவர்கள் வரையில் பதிவு செய்துள்ளார்கள். இன்னமும் வந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இத்துடன் இந்த கண் மருத்துவ முகாமை நடத்துவதற்கு எல்லா வகையிலும் ஒத்தாசை புரிந்த Dr.  Kantha Niranjan,  specialist,  UK அவர்களுக்கும் Dr. Puvanachandra,  Opthalmologist,  UK,  Dr. Sarweswaran UK அவர்களுக்கும், தளபாடங்கள் தந்த அமைப்பிற்கும்,  முக்கியமாக மட்டக்களப்பு, கல்முனை Eye Surgeon களுக்கும் எனது மரியாதையை பதிவு செய்கிறேன்.

மிக விரைவில் நிரந்தரமான கண் சிகிச்சை கிளினிக் வாரத்தில் ஒருதடவை நடாத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் இதுவே தனது நீண்டகால கனவாகும் என்பதனையும் பதிவு செய்தார்.

சமூக தொண்டென்பது இறைவனுக்கு செய்யும் சேவை என்பதை தெளிவாக புரிந்து கொண்டு செயலாற்றும் மக்களின் சேவகன் பெருமை எனும் புகழை விரும்பாத திரு.Dr.சுகுணன் அவர்களுக்கு மாருதம் செய்திகள் சார்பாகவும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments

Powered by Blogger.