மட்டு- வெல்லாவெளியில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி!!(படங்கள் உள்ளே)

                                                                                                   - அ.ஜெயப்பிரதாபன் -
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட வெல்லாவெளி கிராமத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை  அதாவது ( 01/09/2017) அதிகாலை 05:30 மணியளவில் காட்டு யானை தாக்கி 61வயதான தம்பிராசா திருச்செல்வம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அதிகாலை வேளை வயல் பகுதியை நோக்கி சென்றவரையே புதருக்கருகிலிருந்தவாறு யானையினால் தூக்கி வீசியெறிந்து மிதித்து கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெல்லாவெளிப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

வெல்லாவெளிக் கிராமத்தோடு சேர்ந்த புத்தடி மோடு எனும் வயல் பகுதி காணப்படுகிறது அது கிராமத்தோடு இணைந்தே உள்ள காரணத்தால் ஊரிலுள்ள அனைவரும் அங்கு நடுமாடுவது சகஜம் அதே போன்று மக்களுக்கு இடைஞ்சல் விளைவிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசமும் அதிகம் இது போன்ற பல உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்தும் பல காலங்களாக இடம்பெற்று வருவதால் மக்கள் பிரதேச செயலாளர் ஊடாக மாவட்ட அரசாங்க அதிபர் வனவளப்பிரிவு போன்ற அனைத்து செயலகங்களிலும் முறையிட்டும் இது வரைக்கும் எந்த விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என பிரதேசவாசிகள் மிகுந்த விசனம் தெரிவித்துள்ளதோடு இவ்வாறான உயிழப்பு சம்பவங்களை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியினை துரிதப்படுத்தினாலொழிய இவ்வாறான உயிரிழப்புகளை தவிர்ப்பதென்பது மிகக்கடினமானதொன்றாகவே அமையுமென்றும் அவ்வாறு உடனடியாக பாதுகாப்பு மின்சார வேலி அமைக்காத பட்சத்தில் இவ்வாறான காட்டு யானைகளின் கொடூரத் தாக்குதல்களுக்கு மக்கள் தினந்தோறும் முகம் கொடுப்பது மட்டுமல்லாமல் காலப்போக்கில் கிராமத்தில் மக்கள் வாழமாட்டர்கள் யானைகள் மாறும் காடாக வெல்லாவெளி பிரதேசம் மாற்றமடையும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை என மக்கள் மிகவும் கவலை தெரிவிக்கின்றனர்.No comments

Powered by Blogger.