இந்திய கிரிக்கட் வீரர் இலங்கையில் மரணம்!!

இந்தியாவின் கிரிகெட் வீரர் ஒருவர் இலங்கையில் பரிதாபகரமான மரணத்தை எய்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. குறித்த வீரர் இலங்கை வந்துள்ள நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்றுவரும் பதினேழு வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள இந்தியாவிலிருந்து வந்த வீரரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

நீர்கொழும்பு மாவட்டத்திலு உள்ள பமுனுகம ஹோட்டலின் நீச்சல் தடாகத்தில் குறித்ட வீரர் நீச்சலில் ஈடுபட்டுள்ளார். இதன்போது இவர் திடீரென்று நீந்தமுடியாத நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரென்றும் இவருக்கு தற்பொழுது பன்னிரண்டு வயது என்றும் விசாரணைகளின்மூலம் தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் மாலை வேளையில் நடந்த இந்த விபத்தினால் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்காக 19 இந்திய இளம் வீரர்கள் இங்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.