சர்வதேச போட்டியில் முதலிடம் பிடித்த கிளிநொச்சி இனைஞன்!

சர்வதேச ரீதியிலான நடனப் போட்டி ஒன்றில் இலங்கை சார்பில் கலந்து கொண்ட இளைஞன் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியை சேர்ந்த இலங்கரட்ணம் சஜித் என்ற இளைஞன் சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் சிதரம்பத்தில் நடைபெற்ற ஹிடின் ஜடியல் 2017 சர்வதேச நடன போட்டியில் இவர் வெற்றி பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் உலக நாடுகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.

கடந்த ஜூலை மாதம் வட இலங்கை சங்கீத சபையால் நடத்தப்பட்ட ஹிடின் ஜடியல் தேசிய மட்ட போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று சிறந்த ஆற்றுகையாளராக இலங்கரட்ணம் சஜித் தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில் 22 தொடக்கம் 28 வயது பிரிவுப் போட்டியில் இந்தியா உட்பட பல நாட்டுப் போட்டியாளர்களுடன் போட்டியிட்டு சஜித் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

ஹிடின் ஜடியல் அமைப்பானது ஆறாவது தடவையாக ஹிடின் ஜடியல் 2017 நிகழ்வை இந்தியா சிதரம்பத்தில் கடந்த மாதம் நடத்தியிருந்தது.

இதேவேளை இவரது சகோதரி இலங்கரட்ணம் சுசானி என்பவா் 16-21 வயது பிரிவு போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.