யாழ்- செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு அலையென திரண்ட மக்கள்(படங்கள் இணைப்பு)


சின்னக் கதிர்காமம் என்றழைக்கடும் யாழ். செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா நேற்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.

தொண்டைமானாற்றில் கோயில் கொண்டுள்ள செல்வச் சந்நிதியான் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தினமும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

14ஆம் நாளான நேற்று காலை வசந்த மண்டப பூஜை இடம்பெற்று, பின்னர் நடராஜ பெருமான் மற்றும் பிள்ளையார் சகிதம் சந்நிதியான் முத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருட்கடாட்சம் புரிந்தார்.

இத் திருவிழாவில் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, எம் பெருமானின் அருளாசியை பெற்றுச் சென்றனர்.

வருடாந்த மகோற்சவத்தில் இன்று தீர்த்தோற்சவம் இடம்பெறுவதோடு, இன்று மாலை நடைபெறவுள்ள மௌன உற்சவத்துடன் விழா இனிதே நிறைவடையும்.

செல்லக் கதிர்காமம், சின்னக் கதிர்காமம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் செல்வச்சந்நிதி ஆலயத்தில், கதிர்காமத்தை போலவே வாய்கட்டி பூஜை நடைபெறுகின்றமை சிறப்பம்சமாகும்.


No comments

Powered by Blogger.