கா.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று முதல்!!

நடந்து முடிந்த கல்விப் பொதுத் தரா­தர உயர்­தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று வியா­ழக்­கி­ழமை முதல் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இதன் முதற்­கட்ட பணி­க­ளுக்­காக 27 பாட­சா­லைகள் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

அவற்றில் ஐந்து பாட­சா­லை­களை முழு­மை­யா­கவும் 22 பாட­சா­லைகள் பகு­தி­ய­ள­விலும் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் அத்­தி­ணைக்­களம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

நாட­ளா­விய ரீதியில் கடந்த 8 ஆம் திகதி முதல் செப்­டெம்பர் 2 ஆம் திகதி வரையில் கல்வி பொதுத்தரா­தர உயர்­தர பரீட்சை நடை­பெற்­றது.

இந்­நி­லையில் குறித்த பரீட்­சையின் விடைத்தாள் மதிப்­பீட்டு பணிகள் இன்று வியா­ழக்­கி­ழமை முதல் எதிர்­வரும் 20 ஆம் திகதி வரையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

இதன் முதற்­கட்ட பணி­க­ளுக்­காக 27 பாட­சா­லைகள் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள நிலையில் அவற்றில் ஐந்து பாட­சா­லைகள் முழு­மை­யா­கவும் ஏனைய 22 பாட­சா­லைகள் பகு­தி­ய­ள­விலும் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

இதன்­ப­டி கொழும்பு றோயல் கல்­லூரி, கண்டி கிங்ஸ்வூட் வித்­தி­யா­லயம், கண்டி விஹா­ர­மகா தேவி மகளிர் பாட­சாலை, கண்டி சுவர்­ண­மாலி மகளிர் பாட­சாலை, கண்டி சீதா தேவி மகளிர் பாட­சாலை ஆகி­யன முழு­மை­யாக பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

அத்­துடன் கொழும்பு விசாகா கல்­லூரி, கொழும்பு நாலந்தா கல்­லூரி, களுத்­துறை வேளாப்­புர மகா வித்­தி­ய­ாலயம், நீர்­கொ­ழும்பு புனித பீட்டர் மத்­திய கல்­லூரி, கம்­பஹா பண்­டா­ர­நா­யக்க கல்­லூரி, கம்­பஹா ரத்­னா­வளி மகளிர் கல்­லூரி, இரத்­தி­ன­புரி பேர்­கசன் உயர்­கல்­லூரி, குரு­நா­கலை மலி­ய­தேவ மகளிர் கல்­லூரி, குரு­நா­கலை மலி­ய­தேவ ஆண்கள் கல்­லூரி, குளி­யாப்­பிட்டி மத்­திய கல்­லூரி, கேகாலை சுவர்ண ஜயந்தி மகா வித்­தி­யா­லயம், அநு­ரா­த­புரம் மத்­திய கல்­லூரி, பொலன்­ன­றுவை றோயல் மத்­திய கல்­லூரி ஆகி­ய­னவும் பகு­தி­ய­ளவில் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

மேலும் காலி வித்­தி­யா­லோக வித்­தி­யாலயம், மாத்­தறை சுஜாதா வித்­தி­யா­லயம், மாத்­தறை புனித தோமஸ் வித்­தி­யா­லயம், ஹாலி­எல மஹா வித்­தி­யா­லயம், பண்­டா­ர­வளை புனித ஜோசப் வித்­தி­யா­லயம், கல்­முனை வெஸ்லி வித்­தி­யா­லயம், மட்­ட­க­ளப்பு வின்சன் மகளிர் மத்­திய கல்­லூரி, வவு­னியா மத்­திய கல்­லூரி, யாழ்ப்­பாண மத்­திய கல்­லூரி ஆகி­ய­னவும் குறித்த விடைத்தாள் மதிப்­பீட்டு பணி­க­ளுக்­கா­கவும் பகு­தி­ய­ளவில் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவ்­வ­றிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

குறித்த பணி­க­ளுக்­காக முழுமையாக மூடப்படும் ஐந்து பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக செப்டெம்பர் 21ஆம் திகதி திறக்கப்படவுள்ளதுடன் பகுதியளவில் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் அனைத்திலும் நேற்றைய தினம் முதல் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.