தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஹட்டன் ஸ்டெதன் தோட்ட தொழிலாளர்களை நாள் ஒன்றுக்கு 18 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டுமென தோட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து செனன் தோட்ட தொழிலாளர்களால் வியாழக்கிழமை ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செனன் தோட்ட தொழிலாளர்களை நாள் ஒன்றுக்கு 18 கிலோ தேயிலை பறிக்க வேண்டுமென தோட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருவதாகவும் மழைக்காலங்களில் 18 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க முடியாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செனன் தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

கொழுந்து காணப்படுகின்ற காலப்பகுதியில் 18 கிலோவுக்கும் அதிகமாகவே பறித்து கொடுப்பதாகவும், தற்பொழுது சீரற்ற காலநிலை காணப்படுவதால் தோட்ஹட்டன் ஸ்டெதன் தோட்ட தொழிலாளர்களை நாள் ஒன்றுக்கு 18 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டுமென தோட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து செனன் தோட்ட தொழிலாளர்களால் இன்று வியாழக்கிழமை ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செனன் தோட்ட தொழிலாளர்களை நாள் ஒன்றுக்கு 18 கிலோ தேயிலை பறிக்க வேண்டுமென தோட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருவதாகவும் மழைக்காலங்களில் 18 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க முடியாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செனன் தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

கொழுந்து காணப்படுகின்ற காலப்பகுதியில் 18 கிலோவுக்கும் அதிகமாகவே பறித்து கொடுப்பதாகவும், தற்பொழுது சீரற்ற காலநிலை காணப்படுவதால் தோட்ட நிா்வாகத்திற்கு நாங்கள் எவ்வாறு 18 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க முடியுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். 

இவ்விடயம் குறித்து கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கு பலமுறை தெரியப்படுத்திய போதும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென செனன் தோட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர். 

இந்த ஆர்ப்பாட்டமானது காலை 08 மணி முதல் 11 மணி வரை இடம் பெற்றது. 

எவ்வாறாயினும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செனன் தோட்ட தொழிலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

நிா்வாகத்திற்கு நாங்கள் எவ்வாறு 18 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க முடியுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். 

இவ்விடயம் குறித்து கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கு பலமுறை தெரியப்படுத்திய போதும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென செனன் தோட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர். 

இந்த ஆர்ப்பாட்டமானது காலை 08 மணி முதல் 11 மணி வரை இடம் பெற்றது. 

எவ்வாறாயினும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செனன் தோட்ட தொழிலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments

Powered by Blogger.