யாழில் வீதியால் சென்றவர் திடீர் மரணம்

யாழ்ப்பாணம் வேலணை துறையூர்ச் சந்தியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவைச் சேர்ந்த ஆண் ஒருவரே நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீதியால் சைக்கிளில் சென்ற நிலையில் இடைநடுவில் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கடலில் வீழ்ந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.