ரசிகரின் செல்போனை தூக்கி போட்டு உடைத்த பிரபல நடிகர்

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் ரசிகர் ஒருவரின் செல்போனை தூக்கி போட்டு உடைத்துள்ளார்.
விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் கலந்து கொண்ட இந்தி திரைப்பட நடிகர் சல்மான்கான், நிகழ்ச்சிக்கு பின்னர் தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார்.


அப்போது ரசிகர் ஒருவர் சல்மான்கானிடம் தனது செல்போன் பற்றி பெருமையடித்தார்
அதாவது, தனது புதிய செல்போனை தூக்கி எறிந்தாலும் உடையாது எனவும் வேண்டுமானால் தூக்கிப் போட்டுப் பாருங்கள் எனவும் ரசிகர் கூறியுள்ளார்.
ரசிகரின் கோரிக்கையை சல்மான்கான் முதலில் ஏற்காத நிலையில், அவர் மீண்டும் கட்டாயப்படுத்தியுள்ளார்.

ரசிகரின் தொடர் தொந்தரவால் கடுப்பான சல்மான்கான் அவரின் செல்போனை வாங்கி இரண்டு முறை கீழே போட்டும் அது உடையவில்லை.
பின்னர், மூன்றாவது முறை வேகமாக வீசியபோது செல்போன் உடைந்தது. இதை பார்த்து ரசிகர் கவலையடைய மற்றவர்கள் சல்மானை பாராட்டினார்கள்.

No comments

Powered by Blogger.