கௌரவ அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவினால் கதுறுவெல விவசாய பொருளாதார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்!!

                                                                                                  - அ.ஜெயப்பிரதாபன் -
இன்று வியாழக்கிழமை காலை 10:00 மணியளவில் வடமத்திய மாகாணம் பொலன்னறுவை கதுறுவெல நகரத்துக்கான விவசாய பொருளாதார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் அதனைத் தொடர்ந்து அந்த மாகாணத்திற்குட்பட்ட மூன்று கல்வி வலயங்களுக்கு கல்வி கற்கும் மாணவர்களின் போக்குவரத்து வசதியினை மேம்படுத்த மூன்று பேருந்துவண்டிகளும் வழங்கி வைத்தார் அதோடு கூடி மரக்கன்றொன்றும் நட்டு வைத்து இயற்கையை பாதுகாப்பபோம் என்ற தொனியிலும் ஒரு செய்தியை உரைத்தார் அதனைத் தொடர்ந்து மட்டு அம்பாறை போன்ற ஏனைய மாவட்டங்களுக்கும் வடமத்திய மாகாணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் மூவின மக்களும் செல்வத் திருநாட்டின் புதல்வர்கள் என்றும் உரையாற்றினார் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. 

இந்த நிகழ்வில் கிராமியப் பொருளாதாரம் பற்றிய மைச்சர் கௌரவ பீ.ஹரிசன் அவர்களும் கலந்து கொண்டதோடு மூவின மதக்குருமார்களும் பிரதேசவாள் மக்களும் கலந்துகொண்டார்கள்.

இறுதியில் பொதுமக்கள் சிலருக்கு ஜனாதிபதியினால் காணி உறுதிப் பத்திரங்களும் கையளிக்கப்பட்டதோடு பல மக்களையும் சந்தித்து உரையாடி அவர்களது மகஜர்களையும் கடிதங்களையும் பெற்றுக்கொண்டார்.

No comments

Powered by Blogger.