சற்றுமுன்னர் நிந்தவூர் பிரதான வீதி HNB வங்கிக்கு முன்னால் வாகன விபத்து! பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே பலி!!

                                                                                                   - மொகம்மட் இஜாஸ் -

நிந்தவூர் அட்டப்பள்ளத்தினைச் சேர்ந்த பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி!

இன்று (2017.09.07) நிந்தவூர் பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நிந்தவூர் அட்டப்பள்ளத்தை சேர்ந்த 26 வயதுடைய சரவணமுத்து பிரியா என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார் இவர்  3 வயது பெண் பிள்ளையின் தாயாவார்.

இது பற்றி மேலும்  தெரியவருவதாவது.

இவர்  தன் கணவருடன் கொள்வவனவு  நோக்கில் கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் நிந்தவூர் பிரதான வீதியில் வெண்ணிற லொறி ஒன்று முந்திச்செல்ல முயன்ற போது இந்த விபத்து சம்பவம் நேர்ந்துள்ளது.

விபத்தில் மரணமடைந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த  விபத்தில் அதிர்ஷ்ட வசமாக குறித்த பெண்ணின் கணவரும் (காங்கேயன்) 3 வயது நிரம்பிய நிதுஷனா எனும் பெண் பிள்ளையும் உயிர் தப்பி கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து சம்பந்தமான CCTV காட்சிகள் பெறப்பட்டுள்ளதாகவும் குறித்த லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் சம்மாந்துறை பொலிசார்  இற்கு தெரிவித்தனர்.


No comments

Powered by Blogger.