பொலிஸ் உத்தியோகத்தரின் மோசமான செயற்பாடு! வைரலாகும் காணொளி

கூட்டு எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மோசமான முறையில் தாக்குதல் நடத்திய காணொளி ஒன்று வைரலாக பரவி வருகின்றது.

மத்தள விமான நிலையம் மற்றும் மாகம்புர துறைமுகம் ஆகியவற்றை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் இன்று காலை ஹம்பாந்தோட்டையில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்னால் வந்து, அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவொன்று கையளித்திருந்தனர்.

இதன்போது தடையை மீறி செல்ல முயற்சித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர்கள் அழைத்துவரும் போது, மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் குறித்த இளைஞனின் கண்ணத்தில் அடித்துள்ளார்.

மிகவும் மோசமான முறையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருவதுடன், கடும் கண்டனங்களும் எழுகின்றன.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இந்த காணொளியை தனது டுவிட்டரில் பதிவிட்டு இதுதான் நல்லாட்சியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments

Powered by Blogger.