தமிழர்களது புராதனச் சின்னங்களை பாதுகாக்க ஓர் அரிய சந்தர்ப்பம்! தகவல் தெரிந்தால் உடனே அறிவிக்கவும்

தமிழர்களது தொன்மைகளை வெளிப்படுத்தும் இடங்கள், ஆலயங்கள், புராதனச் சின்னங்கள், பாரம்பரியமான அடையாளங்கள், கல்வெட்டுகள் என்பன சிதைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகின்றது.
இதனை பாதுகாக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் புராதனச் சின்னங்கள் தொடர்பான விவரங்களை வழங்குமாறு தொல்பொருள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

நவம்பர் மாதம் 15 திகதிக்கு முன்னர் தகவல் வழங்குமாறும் தொல்பொருள் திணைக்களம் கூறியுள்ளது.

பொதுமக்களால் வழங்கப்படும் தகவல்கள் இரண்டு குழுக்கள் மூலம் ஆராயப்பட்டு நினைவுச்சின்னங்களாகவோ, வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களாகவோ அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாணம், மாவட்ட ரீதியாக தங்களால் தெரிவு செய்யப்படும் இடங்கள் தொடர்பான விவரங்களைப் பொதுமக்கள் எவரெனும் தெரிவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.