சசிகலாவுக்கு பரோல்: இன்றே வெளியில் வருகின்றார்! பெங்களூர் சென்றார் தினகரன்

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சசிகாலவுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கு 5 நாட்கள் பரோல் வழங்கி கர்நாடகா சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து பெங்களூரு சிறையில் இருந்து இன்றே சசிகலா வெளியே வருவார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், சசிகலாவை அழைத்துவர தினகரன் பெங்களூர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற சசிகலா மற்றும் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை பார்ப்பதற்கு பரோல் கேட்டு சசிகலா சிறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்திருந்தார்.

முதலில் 'முறையான ஆவணங்கள் இல்லை' என அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

தொடர்ந்து உரிய ஆவணங்களுடன் இரண்டாவது முறையாக மனு செய்தார் சசிகலா.

அதைத் தொடர்ந்து சசிகலாவுக்கு பரோல் வழங்குவதில் தமிழக காவல் துறைக்கு ஆட்சேபனையில்லை என தெரிவிக்கப்பட்டதுடன், சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கியது சிறை நிர்வாகம்.
 

No comments

Powered by Blogger.