தாத்தாவால் பேத்திக்கு நடந்த அவலம்: 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை!!

மாவனல்ல பகுதியில், 11 வயதான பேத்தியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 82 வயதான தாத்தாவிற்கு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.தனது மகனின் இரண்டாவது மனைவியின் 11 வயதான மகளை மூன்று சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குறித்த 82 வயதான நபர் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.இந்த குற்றச்சாட்டை குறித்த நபர் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அவருக்கு பதினைந்து ஆண்டு சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 15,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஒன்பது மாத சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.