கூட்டமைப்பின் முடிவு 16 ஆம் திகதி வெளியாகும்!!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளது.

இது தொடர்பான தீர்மானத்தை நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் நேற்றைய தினம் எடுத்ததாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் சமர்பிக்கப்பட்ட முதல் இரண்டு வரவு- செலவுத்திட்டங்களுக்கு கூட்டமைப்பு ஆதரவு அளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

எவ்வாறாயினும் நேற்று சமர்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் தமிழ் மக்கள் ஓரளவு நன்மையடைவார்கள் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

எனினும் நாடாளுமன்ற குழுகளின் பிரதித்தலைவரும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வரவுசெலவுத்திட்டம் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் பயக்காது எனவும், இதன்மூலம் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்தித்த பின்னர் வரவு செலவு திட்டம் தொடர்பில் ஒரு முடிவை எடுப்பதாக தெரிவித்திருப்பது குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.