ஏமெனில் மீண்டும் சவூதி கூட்டுப்படை விமான தாக்குதல்: 3௦ பொது மக்கள் பலி

யமனின் ஹாஜ்ஜா மாகாணத்தில் சவூதி அராபியா மற்றும் அமெரிக்க கூட்டு படைகளின் விமான தாக்குதலால் ஆண், பெண்கள், சிறுவர்கள் உட்பட 3௦ பேர் மரணமடைந்திருந்ததுடன், 12 பேர் காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
கடந்த வாரம் சவூதி அரேபியா மற்றும் அமெரிக்க கூட்டு படைகளின் விமான தாக்குதலில் 29 பொது மக்கள் பலியானார்கள். இதேவேளை 17 பேர் காயமடைந்தார்கள்.

ஏமனின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் அங்கு உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப்படையினர் கடந்த 3 ஆண்டுகளாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏமனின் அரச படையினருக்கு ஆதரவாக சவூதி அரேபியா மற்றும் அமெரிக்க கூட்டுப்படையினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான் யமனின் தென்பகுதியில் உள்ள ஹவுத்தி படையின் கட்டுப்பாட்டில் உள்ள சஹர் மாவட்டத்தில் பிரபல வர்த்தக பகுதிகளின் விடுதிகள் மீது சவூதி கூட்டுப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் பொது மக்கள் உட்பட கட்டடங்களும் தாக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம்களை அழிக்கும் முஸ்லிம் நாடுகள்

சிரியா நாட்டில் அப்பாவி மக்கள் மீதும், சிறுவர்கள் மீதும் அரசாங்க படைகள் கடந்த 5 ஆண்டுகளாக மிருகத்தனமான காட்டு தர்பார் நடத்தி அந்த மக்களை அழித்து அந்த நாட்டையே அளித்து மக்களையும் அளித்து அந்த நாட்டை குட்டிச்சுவராக்கி வருகிறது அரசு.

இன்று சிரியா நாட்டு மக்கள் ஐரோப்பா முழுவதும் அகதிகளாக இன்றும் மெடிட்ரேனியன் கடலில் மரணித்து வருகின்றார்கள். இன்னும் அங்கு இரத்த வெறி அடங்கவில்லை.

துருக்கி, அல்ஜீரியா, உகண்டா, சோமலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இப்போது யமன் இப்படியாக முஸ்லிமை முஸ்லிமே அடித்துக் கொல்லும் இழிவு நிலை.

இவைகளை தட்டிக் கேட்க எந்தவொரு நாடும் இல்லை. ஐ.நா மன்றம் உட்பட அத்தனை நாடுகளும் கை கட்டி பார்த்துக் கொண்டுள்ளது.

ஆனால் அழிவது மனித இனம் என்பதுதான் வேதனை. பதவி மோகம் கொண்டவர்களும், அவர்கள் சார்ந்த நாடுகளும் அடித்துக் கொள்ளும் போது எந்தவொரு நாடும் கண்டு கொள்வதில்லை.

இப்போது சவூதி அராபியா, ஏமனை அழித்து அந்த மக்களையும் அழிக்காமல் ஓயாது. இரத்த வெறி பிடித்த பதவி, ஆசை, மோகம் கொண்டவர்களுக்கு இது பாவம் என்று தெரியவில்லையா?

அழிக்கப்படுவது மனித இனம் என்று தெரியவில்லையா? உள்நாட்டுப்போரில் சவூதி மூக்கை நுழைத்துள்ள நிலையில் அதற்கு அமெரிக்காவும் துணை நிற்பது எந்த விதத்தில் நியாயம்?

இதற்கு ஒரு கண்டனம் வேண்டாமா? எம்மால் முடிந்த இந்த ஒரு எதிர்ப்பையாவது காட்ட வேண்டாமா? சவூதியிடம் கையேந்தி நிற்கும் நாடுகள் ஒரு போதும் இந்தக் கண்டனத்தை செய்யாது.

மனிதர்கள் என்றால், மனித நேயம் இருந்தால் நாளை வெள்ளிகிழமை சவுதிக்கு எதிரான மனித படுகொலைகளுக்கு எதிராக, ஆயுத மோதலுக்கு எதிராக அமைதி வேண்டி ஒரு கண்டனப்பேரணி செய்வோமா?

No comments

Powered by Blogger.