சுமார் 400 பேரை பலியெடுத்த நிலநடுக்கம்! இலங்கையர்களுக்கு பாதிப்பா?

ஈரான் மற்றும் ஈராக் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 400 பேர் உயிரிழந்ததுடன், 7000 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அங்குள்ள இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என இலங்கைக்கான வெளிநாட்டு வேலைவாய்பு பணியகம் தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து அங்கு சென்ற இலங்கை பணியாளர்களின் எண்ணிக்கை மிக குறைவாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் ஈராக் எல்லைப் பகுதியில் இடம் பெற்ற நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400 பேர் எனவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 7000 பேர் வரை அதிகரித்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 7.3 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது.

மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தற்போது இடம்பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.