மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராக என்.மணிவண்ணன் கடமையை பொறுப்பேற்றார்.

(வெல்லாவெளி  நிருபர் -க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளாராக என்.மணிவண்ணன் பதிவியேற்பு.

கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளாராக கடமையாற்றிய என்.மணிவண்ணன் அவர்கள் மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளராக இன்று(8.11.2017) திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் தனது கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம அவர்களின் விஷேட பரிந்துரையில் இவர் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரால் நியமிக்கப்பட்டார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பட்டதாரியான இவர் இலங்கை நிருவாகச்சேவை போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து 2003.9.2 திகதியன்று மூதூர் பிரதேச செயலகத்தில் உதவிப்பிரதேச செயலாளராக கடமையாற்றினார்.அதன்பின்னர் குறித்த பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக 2006 முதல் பதவியுயர்வு பெற்று கடமையாற்றினார்.2008 முதல் 2017 வரையும் மீண்டும் கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளராக பதவியுயர்வு பெற்று கடமையாற்றினார்.அதன்பின்பு 2012 முதல்2015 வரையும் உள்ள காலப்பகுதியில் யப்பான் நாட்டில் முதுநிலைக் கற்கைநெறியைக் கற்றுக்கொண்டார்.திருகோணமலை பாலையூற்றை பிறப்பிடமாக கொண்டவரும்,திருகோணமலை விபுலானந்தா கல்லூரியின் பழையமாணவருமார்.

No comments

Powered by Blogger.