புலமைப்பரீட்சை பெறுபேறு நிரல்படுத்தலில் மட்டக்களப்பு கல்வி வலயம் ஆறாவது இடத்தை தட்டிக்கொண்டது.

அண்மையில் வெளியாகியுள்ள புலமைப்பரீட்சை(2017) பெறுபேற்றினை இலங்கை பரீட்சை திணைக்களம் வெட்டுப்புள்ளிக்கு மேல் எடுத்தவர்களை கொண்டு வலயக்கல்வி அலுவலகம் ரீதியாக பகுப்பாய்வு செய்து அதனை நிரல்படுத்தியது.இதன் அடிப்படையில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகம் ஆறாம் இடத்தை பெற்றுள்ளதாக மண்முனை வடக்கு முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.சுகுமாரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவகத்தின் புலமைப்பரீட்சை பெறுபேறு வலயக்கல்வி அலுவலக ரீதியாக நிரல்படுத்தப்பட்டுள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை(12.11.2017) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேலுள்ளவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:-

அதாவது நாடளாவியரீதியில் 99 வலயக்கல்வி அலுவலகம் காணப்படுகின்றது.இந்த வலயக்கல்வி அலுவலக ரீதியான நிரல்படுத்தலில்தான் மட்டக்களப்பு கல்வி வலயம் ஆறாம் இடத்தை பெற்றுள்ளது.இது எமக்கும்,எமது வலயத்திற்கும் கிடைத்த மகத்தான சாதனையாகும்.இது மெச்சத்தக்க விடயமாகும்.இதற்குரிய ஆலோசனைகளையும்,வழிகாட்டல்களையும் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்கள் மேற்கொண்டு அதனை அதிபர்கள்,ஆசிரியர்கள் ஊடாக நெறிப்படுத்தி அதன் மூலம் கிடைத்த பெறுபேற்றில்தான் இந்த ஆறாம்இடம் கிடைத்துள்ளது.

இலங்கை பரீட்சை திணைக்களம் புலமைப்பரீட்சை பெறுபேற்றை மீளாய்வு செய்து நிரல்படுத்தியது. முதலாவது இடத்தை யாழ்ப்பாண கல்வி வலயமும்,இரண்டாம் இடத்தை தங்கல்ல வலயமும்,மூன்றாவது இடத்தை குளியாப்பிட்டிய வலயமும்,நான்காவது இடத்தை நிக்கவெட்டிய வலயமும்,ஐந்தாவது இடத்தை வலஸ்முல்ல வலயமும்,ஆறாவது இடத்தை மட்டக்களப்பு கல்வி வலயமும் பெற்றுக்கொண்டது.மாகாண நிரப்படுத்தலில் இரண்டாம் இடத்தை வடக்கு மாகாணமும்,எட்டாம் இடத்தை கிழக்குமாகாணமும் தட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.