கரடியனாறு காட்டுப்பகுதியில் சட்டவிரோத மரங்கள் வெட்டியவர் பொலிசாரைக் கண்டு தப்பியோட்டம்.மரங்கள்,மாட்டுவண்டிகள்,மாடுகள் மீட்பு!!

                                                                                   -க.விஜயரெத்தினம் -
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள தொப்பிக்கலை ஈரக்குளம் காட்டுப் பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் குழு ஒன்று மாட்டுவண்டியில் சென்று மரங்களை வெட்டிய போது பொலிசாரை கண்டு தப்பி ஓடியுள்ளார்கள்.இதன்போது கரடியனாறு பொலிசார் 7 மாட்டுவண்டிகளையும், இரண்டு மாடுகளையும், மற்றும் மரங்களையும், சனிக்கிழமை(18.11.2017) மதியம் மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரக்கோன் தெரிவித்தார். 

குறித்த பகுதியில் உள்ள காட்டில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டு காடழிப்பு இடம்பெறுவதாக பொலிசாருக்க கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பகுதியில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரக்கோன் தலைமையிலான பொலிஸ்குழுக்கள் சனிக்கிழமை காட்டுப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது சட்டவிரோத மரக்கடத்தல் கும்பல் பொலிசாரைகண்டு வெட்டிய மரங்கள் மற்றும் மாட்டுவண்டிகளையும் மாடுகளையும் கைவிட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்கள். இதனையடுத்து பொலிசார் கைவிடப்பட்ட 7 மாட்டுவண்டிகள் 2 மாடுகள் மற்றும் வெட்டப்பட்ட மரங்களை மீட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மீட்கப்பட்ட உடைமைகளின் பெறுமதி சுமார் ஐந்து இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை கடந்த வியாழக்கிழமை புல்லுமலை பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக கனரக வாகனத்தில் மரங்களை எடுத்துச் சென்ற ஒருவரை கைது செய்து நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .No comments

Powered by Blogger.