பிரபல சட்டத்தரணிகளுடன் ஆணைக்குழுவில் முன்னிலையாகும் பிரதமர்!

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கவுள்ளார்.
கொழும்பு அரசியலில் மத்திய வங்கி பிணை முறிமோசடி முக்கிய பிரச்சினையாக இருந்து வரும் நிலையில், கூட்டு எதிர்க்கட்சியனர் ஆளும் கட்சிக்கு கடும் அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் மீது கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட நிலையில் நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க பதவி விலகியிருந்தார்.

தொடர்ந்தும் அமைச்சர்களான கபீர் ஹாசிம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்கள்.

தொடர்ந்தும் கூட்டு எதிர்க்கட்சியினர் அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், நாளைய தினம் பிரதமர் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

இந்நிலையில், பிரதமருடன் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கர் தவராஜாவின் அனுசரனையுடன் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சட்டத்தரணி சுரேன் பெர்ணாட்டே ஆகியோர் ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.