கல்முனை தமிழ் பிரிவில் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம்!!

                                                                                            - செ.துஜியந்தன் -
கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் இருப்பதாகவும் மக்களை விழிப்புடன் செயற்படுமாறும் கல்முனை வடக்கு சுகாதாரப் பணிமனை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கல்முனை பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழை காரணமாக டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரிக்கும் வாய்பு ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை துப்பரவாக வைத்திருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.


பிரதேச சுகாதாரப் பரிசோதகர்கள் தலைமையிலான குழுவினரும் வீடு வீடாகச் சென்று டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வில் ஈடுபட்டுவருகின்றனர். வீடுச் சுற்றுபுறத்தை துப்பரவு செய்யாதவர்கள் இனம காணப்பட்டு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றன. 
இம் மழை காலத்தில் மக்கள் கொதித்தாறிய நீரைப்பருகுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.