தொடர் போராட்டம் எதிரொலி - பத்மாவதி திரைப்படம் வெளியீடு தள்ளிவைப்பு!

ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஆகியோர் நடித்துள்ள பத்மாவதி படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

Photo Credit: FilmPadmavati Twitter Handle


சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் படம், பத்மாவதி. ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதி வாழ்க்கை வரலாற்றைக் கொண்டு அடிப்படையாக எடுக்கப்பட்டுள்ளது. இதில், பத்மாவதியாக தீபிகா படுகோனும், ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். 

படப்படிப்பு தொடங்கியது முதலே ராஜஸ்தானைச் சேர்ந்த படத்துக்குக் கடும் எதிர்ப்பை ராஜபுத்திர சமூக மக்கள் தெரிவித்து வருகின்றனர். ராஜ்புத் கர்னி சேனா என்ற அமைப்பு படத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறி, தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு கோட்டைகளை முற்றுகையிட்டு கர்னி சேனா அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பத்மாவதி திரைப்படம் டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், பத்மாவதி படத்தின் ரிலீஸைத் தாங்களாக முன்வந்து தள்ளிவைப்பதாக தயாரிப்பு நிறுவனமான வையாகாம் 18 (Viacom18) அறிவித்துள்ளது. படத்தில் ரிலீஸ் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. 

No comments

Powered by Blogger.