வாகனம் வாங்க காத்திருக்கின்றீர்களா? இது உங்களின் கவனத்திற்கு

நாடாளுமன்றில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் மேற்கொள்ளப்பட்ட 2018ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் மீதான உரையில் வாகனங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில் சொகுசு ரக வாகனங்களுக்கான விலைகளை 25 இலட்சத்தால் அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முச்சக்கரவண்டிகளுக்கான இறக்குமதி விலையை 50,000 ரூபாவினால் அதிகரிக்கும் திட்டமொன்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், 2040 அளவில் எரிபொருள் அல்லாத மாற்று சக்தி வாகனங்கள் பயன்பாடு அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான விலை 10 இலட்சத்தால் குறைப்பது தொடர்பிலும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிசொகுசு ரக வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி வாங்க காத்திருப்போருக்கு இது அதிர்ச்சியளிக்கும் செய்தியாக காணப்படும் என பல தரப்பினராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.