அம்பாறை கஞ்சிகுடியாறு மற்றும் மட்டு மாவடிமுன்மாரி பழம்பெரும் துயிலுமில்லங்கள் சிரமதானம்!!

                                                                                   -மட்டுநகர் கமல்தாஸ் -
எதிர்வரும் கார்த்திகைமாத மாவீரர் தினத்தினை அவர்கள் கல்லறைகள் முன்பு அனுஸ்டிப்பதற்காக நேற்றைய தினம் அம்பாறை மாவட்ட கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலுமில்லம் காரைதீவு இளைஞர்களினால் சிரமதானம் செய்யப்பட்டு சீமைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மட்டு மாவடிமுன்மாரி துயிலுமில்லமும் இன்றையதினம் பிரதேச கிராம மக்கள் மற்றும் இளைஞர்களினால் சிரமதானம்  செய்யப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாவீரர் துயிலுமில்லங்கள் கடந்த யுத்த சூழல் காலங்களின் பின்னர் கவனிப்பாரற்று காடு மண்டி கிடந்தன அதே வேளை இவ்விரு துயிலுமில்லங்களிலும் ஆரம்பகாலத்தில் வீரமரணமடைந்த மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட இல்லங்களாகும்.

வீரமரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது உரிமை மட்டுமல்ல உலகியல் போர் வரலாற்றின் தர்மமும்கூட அந்த வகையில் எதிர்வரும் கார்த்திகை மாதம் 27ம் திகதி இந்த மாவீரர்களை போற்றி அஞ்சலிப்போம்.

அம்பாறை மாவட்ட கஞ்சிகுடியாறு துயிலுமில்ல சிரமதானப்பணி

மட்டு- மாவடிமுன்மாரி துயிலுமில்ல சிரமதானப்பணிகள்


No comments

Powered by Blogger.