பிரிட்டனில் விமானமும் ஹெலிகாப்டரும் மோதி விபத்து: நால்வர் பலி

விபத்து நடந்த இடம்.

இங்கிலாந்தின் பக்கிங்காம்ஷைர் பகுதியில் நடுவானில், ஒரு விமானமும் ஹெலிகாப்டரும் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

விமானத்தில் பயணித்தவர்களில் இருவரும், ஹெலிகாப்டரில் பயணித்தவர்களில் இருவரும் உயிரிழந்ததாக தேம்ஸ் பள்ளத்தாக்கு போலீஸார் கூறியுள்ளனர்.

விபத்துக்குள்ளான இரண்டும் விமானமும், ஹெலிகாப்டரும் வைகோம்ப் விமானதளத்தில் இருந்து வந்தன.

விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க போலீஸாரும், விமான விபத்துகள் புலனாய்வுப் பிரிவும் கூட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளன.

இறந்தவர்களில் அடையாளம் அல்லது பாலினம் உள்ளிட்ட தகவல்களை தற்போது தன்னால் தரமுடியாது என்றும், இறந்தவர்களில் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிப்பதே தனது முன்னுரிமை என்றும் தேம்ஸ் பள்ளத்தாக்கு போலீஸான ரெபேக்கா மெர்ஸ் கூறியுள்ளார்.

என்ன காரணத்தால் விபத்து ஏற்பட்டது என்பதை இவ்வளவு சீக்கிரத்தில் கூறமுடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

வாட்டெசன் மாளிகை அருகே உள்ள மரங்கள் அடர்ந்த வாட்டெசன் மலைப் பகுதிக்கு அவரசரகால ஊர்திகள் கிரீன்விச் நேரப்படி நள்ளிரவு 12.06க்கு அழைக்கப்பட்டன.

ஓய்வில் இருந்த தீயணைப்பு வீரர் மிட்ச் மிஸ்ஸென் தமது தோட்டத்தில் இருந்து நடுவானில் நடந்த இந்த மோதலைப் பார்த்துள்ளார்.

''நடுவானதில் ஏற்பட்ட விபத்தை நான் பார்த்தேன். அதன்பிறகு பேரொலி கேட்டது. விமானங்களில் சிதைவுகள் விழுந்தன'' என்கிறார் அவர்.

உடனே அவசரக்கால சேவைகளுக்குத் தகவல் சொன்ன இவரால், தமது காரில் சென்று விபத்து நடந்த இடத்தை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

சம்பவ இடத்திற்கு ஏழு தீ வாகனங்கள் அனுப்பப்பட்டன. அத்துடன் இரண்டு விமான ஆம்புலன்ஸ், இரண்டு ஆம்புலன்ஸ் குழுவும் அனுப்பப்பட்டன.

வாட்டெசன் மலைப் பகுதியில் இந்த மோதலுக்குப் பிறகு இருந்து புகை கிளம்பியதாகவும், டிவிட்டர் பதிவுகள் கூறுகின்றன.

No comments

Powered by Blogger.