இன்று அதிகாலை இரண்டு பெண்கள் பரிதாபமாக பலி!!

Image result for Virakesari
கெப் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 2.45 மணியளவில் உடகம தவலம வீதியின் ஹிங்கல்கொட பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

ஹிங்கல்கொட தேயிலை தொழிற்சாலையில் பணி புரிந்த ஊழியர்களை ஏற்றிச்சென்ற கெப் ரக வாகனமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் கெப் ரக வாகனத்தின் சாரதி உள்ளிட்ட 6 பேர் காயமடைந்த நிலையில் கராபிடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

கம்பொத்தாவ பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய பெண்ணொருவரும் மற்றும் பிடமகொட பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய பெண்ணொருவருமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

கெப் ரக வாகனத்தின் சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்த இரண்டு பெண்களினதும் உடலங்கள் கராபிடிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹினிதும காவற்துறையினர் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.