சிம்பாவே அரசியலில் மீண்டும் திடீர் பரபரப்பு

சிம்பாவே ஜனாதிபதி றொபர்ட் முகாபேயைஇ ஆளும் கட்சியான ஜனு பி.எஃப் ட்சியின் தலைவர் பதவியிலிருந்து அக்கட்சி அதிரடியாக நீக்கியுள்ளது.
சிம்பாவேயின் ஆளும் கட்சியா ஜனு பி.எஃப் கட்சியின் நிறுவுனரும் நீண்டகாலத் தலைவருமாக இதுவரைகாலமும் றொபர்ட் முகாபே இருந்துவந்தார்.

ஜனு பி.எஃப் கட்சியின் கூட்டம் இன்று நடைபெற்றபோதே முகாபேயை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஜனாதிபதி முகாபே தனது மனைவி கிரேஸ் முகாபேயை துணை ஜனாதிபதியாக்கும் நோக்கில்இ ஏற்கெனவே துணை ஜனாதிபதியாக பதவி வகித்துவந்த எம்மெர்சன் மனங்கவ்வாவை (Emmerson Mnangagwa) அண்மையில் பதவியிலிருந்து நீக்கினார்.

இதனையடுத்து சிம்பாவேயில் 37 வருடங்களாக ஜனாதிபதியாகவிருந்த முகாபேக்கு எதிராக கடந்த 15ஆம் திகதி ராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், ஜனாதிபதி முகாபேயும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவரைப் பதவியிலிருந்து விலகுமாறும் அழுத்தங்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

No comments

Powered by Blogger.