மட்டு- புதுக்குடியிருப்பில் சுனாமி ஒத்திகை !!

                                                                                           - செ. துஜியந்தன் -
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் மட்டக்களப்பு மண்முனைப்பற்று  புதுக்குடியிருப்பு கிராமத்தில் நடைபெற்ற சுனாமி ஒத்திகையின் போது மக்கள் கிராமத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேறுவதையும் பாதுகாப்பு படையினர், பொலிஸார் பொதுமக்களை வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவிச் சிகிச்சையளிக்கப்பட்டது.  

இந் நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ். அமலநாதன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர்உட்பட கிராமசேவகர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகஸ்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.