தென்கிழக்கில் சாஸ்வதம் மற்றும் இசைத்தட்டு வெளியீடு.

துறையூர் தாஸன்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இந்து மாமன்றத்தினால் சாஸ்வதம் நூல் மற்றும் ஒலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் புகழ் பாடும் ஒலியூர் நாயகனே இசைத்தட்டு ஆகியவற்றின் வெளியீட்டு நிகழ்வு,பல்கலைக்கழக கேட்போர்கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது
இந்து மான்றத்தின் தலைவர் ரீ.டினேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் பிரதம அதிதியாகவும் பல்கலைக்கழக மார்ஷல்,அரபுமொழித்துறைத் தலைவர் எச்.எம்.ஏ.முனாஸ்,விடுதிப் பணிப்பாளர் மன்சூர் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

ஒலியூர் நாயகனே ஒலுவில் பல்கலை விநாயகர் புகழ்பாடும் இறுவெட்டினை,கலாநிதி எஸ்.அனுசியா விரிவுரையாளர் என்.சுபராஜ்ஜிடமிருந்தும் சாஸ்வதம் நூலினை அரபுமொழித் துறைத் தலைவர் எச்.எம்.ஏ.முனாஸ்,கலாநிதி எஸ்.அனுசியாவிடமிருந்து இதன் போது பெற்றுக்கொண்டார்.

இந்துமாமன்ற நிர்வாகிகள்,பீட பீடாதிபதிகள்,பல்கலை சிரேஸ்ட விரிவுரையாளர்கள்,மாணவர் பேரவை நிர்வாகிகள்,மாணவர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.