சைக்கிளில் சென்றதை பதிவிட்டு மகிழ்ச்சியடையும் மஹிந்த மற்றும் நாமல்

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட போது, மஹிந்த உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றுக்கு வருகைத்தந்த விதம் அனைவராலும் பேசப்படுகின்றது.

இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ, உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் சைக்கிளில் நாடாளுமன்றுக்கு வருகைத்தந்திருந்தனர்.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினையை எடுத்துக்காட்டும் வகையிலேயே இவர்கள் சைக்கிளில் வருகைத்தந்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ மற்றும், மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் டுவிட்டர் மற்றும் முகப்புத்தங்கள் மூலம் தமது இந்த செயற்பாட்டை பதிவிட்டதுடன், புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர்.

இதன்மூலம் தமது மகிழ்ச்சியையும், அரசாங்கத்தின் மீது அவர்களுக்குள்ள எதிர்ப்பையும் வெளிப்படுத்துவதாக அமைகின்றது.
 
 

No comments

Powered by Blogger.