தேர்தலுக்கான காலத்தை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கான காலத்தை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி முதல் 31ஆம் திகதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதாவது உள்ளூராட்சி மன்றங்களில் தொடர்ந்தும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அவற்றை தவிர்த்து தேர்தல் நடாத்தப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று கைச்சாத்திட்டார்.

இதைத் தொடர்ந்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதும், தேர்தல் ஆணையாளர் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பார் என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.