துறைநீலாவணையில் மின்னல் தாக்கி இரண்டு பிள்ளையின் தாய் உயிரிழப்பு

                                                                                    -க.விஜயரெத்தினம் -
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணையில் இன்று (19.11.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 7.46 மணியளவில் மின்னல் தாக்கலினால் இரண்டு பிள்ளையின் தாய் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பற்றி தெரிய வருவதாவது.இன்றைய தினம் இடி மின்னல் தாக்கத்துடன் துறைநீலாவணையில் மழை பெய்தது.இதனால் இராசரெட்ணம் -கலைவாணி(வயது -36)எனும் இரண்டு பிள்ளையின் தாய் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தாயின் மகன் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.கடுமையான மின்னல் தாக்கம் துறைநீலாவணையில் இன்று காலை அடித்தது.தொலைக்காட்சியில் மின்னல் விழுந்து பாரிய சத்தம் கேட்டதுடன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்ட மகனை மின்சாரம் தாக்கியது.இதனால் சிறுவன் அல்லோ கல்லப்பட்டு அழுத சத்தம் கேட்டது.சமையல் அறையில் சமைத்துக் கொண்ட மகனின் தாய் இதனை அறிந்து கொண்டு தனது மகனை மீட்டுள்ளார்.மகன் உயிருடன் மீட்கப்பட்டதுடன் தாயை மின்சாரம் இறுக்கமாக பற்றிக்கொண்டது.இதன் காரணமாக தாய் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்துள்ள தாயின் உடலில் மின்சாரம் முழுமையாக பாய்ச்சப்பட்டு உடல் நீலநிறமாக காணப்படுகின்றது.சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் பிரதப்பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழப்பு சம்பந்தமாக களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.


No comments

Powered by Blogger.