மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


இலங்கை அணியின் வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதிற்கு பாத்திரமானார் ரங்கன ஹேரத்

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதிற்கு பாத்திரமானார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் விருது வழங்கல் விழா கொழும்பில் நேற்று (31) நடத்தப்பட்டது.

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் திறமைகளை வௌிப்படுத்திய கிரிக்கெட் வீர, வீராங்கனைகள், அணிகள், நடுவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வருடத்தின் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக குசல் மென்டிஸ் தெரிவானார்.

சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளர் விருது இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் வசமானது.

வருடத்தின் சிறந்த சகல துறை ஆட்டக்காரராக தில்ருவான் பெரேரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வருடத்தின் சிறந்த ஒரு நாள் பந்துவீச்சாளர், துடுப்பாட்ட வீரர் மற்றும் சகல துறை ஆட்டக்காரர் விருதுகள் முறையே குசல் மென்டிஸ், சுரங்க லக்மால் மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் வசமானது.

இதனிடையே இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் சகல துறை ஆட்டக்காரருக்கான விருது அசேல குணவர்தனவுக்கு வழங்கப்பட்டது.

இதேவேளை, இருபதுக்கு 20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளர் விருது லசித் மலிங்க வசமானது.

No comments

Powered by Blogger.