முன்­னாள் போரா­ளி­க­ளுக்கு நல்ல செய்தி!!குறைந்த பட்­சம் 5 முன்­னாள் போரா­ளி­கள் மற்­றும் போரி­னால் வித­வை­யா­ன­வர்­களை தொழி­லுக்­கா­கச் சேர்த்­துக் கொள்­ளும் தனி­யார் நிறு­வ­னங்­கள், தொழி­லா­ளர் ஒரு­வ­ருக்கு ஆகக் கூடி­யது மாதாந்­தம் 10 ஆயி­ரம் ரூபா சம்­ப­ளம் வழங்­கி­னால், அதில் அரசு 50 சத­வீ­தத்தை மானி­ய­மாக வழங்­கும் என்று நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

போர் மற்­றும் இன முறு­க­லி­னால் பாதிக்­கப்­பட்ட வித­வை­க­ளுக்­கும் முன்­னாள் போரா­ளி­க­ளுக்­கும் வாழ்­வா­தார உத­வி­களை வழங்கி அவர்­கள் மீண்­டும் சமூக நீரோட்­டத்­திற்கு உள்­வாங்­கப்­பட வேண்­டி­ய­வர்­க­ளா­க­வுள்­ள­னர்.

மறு­வாழ்வு வழங்­கப்­பட்ட 12 ஆயி­ரம் 600 முன்­னாள் போரா­ளி­க­ளுக்கு நிலை­யான வாழ்­வா­தா­ரத்தை பெற்­றுக் கொடுப்­பது இன்­றி­ய­மை­யா­த­தா­கும். 

இவர்­க­ளில் பெரும்­பா­லா­னோர் பல்­வேறு திறன்­க­ளைக் கொண்­டி­ருந்­த­போ­தி­லும் உரிய முறை­சார் தகை­மை­க­ளைக் பெற்­றி­ருக்­க­வில்லை.

அவர்­க­ளி­டம் காணப்­ப­டும் திறன்­க­ளின் அடிப்­ப­டை­யில் பொருத்­த­மான தேசிய தொழில்­சார் தகமை சான்­றி­தழ்­களை பெற்­றுக் கொள்­வ­தற்­கான வச­தி­கள் செய்து கொடுக்­கப்­பட்டு அவர்­களை தொழில் தகை­மை­யுள்­ள­வர்­க­ளாக உரு­வாக்­கு­வோம்.

இது நட­மா­டும் சேவை­யி­னூ­டாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும். வடக்கு மற்­றும் கிழக்­கில் போர் கார­ண­மாக கற்­றல் நட­வ­டிக்­கை­கள் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கும் இந்த வச­தி­கள் பெற்­றுக் கொடுக்­கப்­ப­டும் என்­றார்.

No comments

Powered by Blogger.