என் ஆளோட செருப்ப காணோம் - திரைவிமர்சனம்

இப்போதெல்லாம் சிறு பட்ஜெட் படங்கள் நல்ல கதைகளை தாங்கி வருகிறதோ இல்லையோ சில விசயங்களால் ஈர்க்கப்படுகிறது. அதில் ஒன்றாக இப்போது வந்திருக்கும் என் ஆளோட செருப்ப காணோம் படம் வந்துள்ளது.
பல படங்கள் வந்தாலும் இப்படி ஒரு டைட்டில் விட்டபோதே இது எப்படி இருக்குமோ என்ற திரும்பி பார்க்க வைத்த இப்படக்கதையில் செருப்பின் பங்கு என பார்க்கலாம்.

கதைக்களம்

கதையின் ஹீரோ தமிழ். இவருக்கேற்ற மாதிரி ஒரு பேக்கிரவுண்ட். இவருடைய நண்பன் யோகி பாபு செய்யும் விசயங்களால் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். காமெடியாக இருந்தாலும் உணர்வுமிக்க காதல் பற்றுகிறது.

ஹீரோயின் கயல் ஆனந்தி தன் தோழியுடன் பஸ்ஸில் செல்லும் நேரத்தில் எதிர்பாராத விதமாக தான் அணிந்திருக்கும் செருப்பில் ஒன்றை தவற விடுகிறார்.

அதை எடுக்கலாம் என நினைத்தும், போனால் போகிறது என இன்னொன்றையும் விட்டுவிடுகிறார். அப்போது தான் ஹீரோ நுழைகிறார். செருப்பு விழுந்த இடத்தை தேடி போக அங்கு செருப்பு காணவில்லை.

திடீரென வெளிநாட்டில் வேலை பார்க்கும் தன் அப்பாவை தீவிரவாதிகள் கடத்தி விட்டார்கள் என்று அதே நாளில் செய்திவர அதிர்ச்சியாகிறார். பின் என்ன சோக மயம் தான்.

அருள்வாக்கு கேட்கும் இடத்திற்கு வர அந்த இடம் ஒரு திருப்பு முனையாக அமைகிறது. செருப்பு தொலைந்தது ஒரு பக்கம், அப்பா கடத்தப்பட்டது மறு பக்கம் என குழப்பத்தில் இருக்கிறார் ஆனந்தி.

முக்கியமானவர் சொன்னார் என்பதற்காக செருப்பை தேடி அலைகிறார் தமிழ். கடைசியில் ஆனந்தியின் அப்பா கிடைத்தாரா, தொலைந்து போன செருப்பு ஜோடியாக கிடைத்ததா, காதல் ஒர்க்கவுட் ஆனதா என்பது தான் கதை.

படத்தை பற்றிய அலசல்

மெரினா, கோலி சோடா படங்களில் சிறு பையனாக நடித்த தமிழ் இப்படத்தில் ஹீரோவாக இப்படத்தில் அறிமுகமாகியிருக்கிறார். அப்படங்கள் போலவே இப்படத்திலும் அவர் தன் இயல்பான நடிப்பை காட்டியிருக்கிறார். ஹீரோயிசம் காட்ட முயற்சிக்கும் விதம் ஓகே. வாய்ப்புகள் வரும் மிஸ்டர் தமிழ்.

கயல் ஆனந்தி பல படங்களில் நடித்த அனுபவமிருந்தாலும் இப்படத்தின் ஹீரோயினான அவருக்கு ஒரு எளிமையான ரோல் தான். ஆனாலும் ரியல் எக்ஸ்பிரஷன் கொடுத்திருக்கிறார். படம் முழுக்க ஒரு நடுத்தர குடும்பத்து பெண்ணாக அவரை அழகாக காட்டியிருக்கிறார்கள்.

யோகி பாபு. இவரை காமெடியன் என சொல்வதா இல்லை ஹீரோ என சொல்வதா. படம் முழுக்க இவரின் பங்கும் நிறைந்திருக்கிறது. வரும் இடங்களிலெல்லாம் கலர்ஃபுல். சில நாட்களுக்கு பிறகு யோகிபாபுவை மீண்டும் பார்த்தாலும் முழு மன நிறைவு.

இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தில் ஒரு கேமியோ ரோல் தான். ஆனாலும் சில நிமிட காட்சியிலும் காமெடியுடன் ஒரு கான்சப்டை வைத்து விட்டுப்போவது இண்ட்ரஸ்டிங். கயல் ஆனந்தியின் அப்பாவாக ஜெயபிரகாஷ் நடித்தாலும் சில நிமிட காட்சிகள் தான்.

இதுபோக நடிகர் சிங்கம்புலி ஒரு காட்சியில் வந்துபோனாலும் இயல்பாக சிரிப்பை வரவழைப்பது படத்தோடு பொருந்துகிறது. இதுபோக லிவிங்ஸ்டன், சித்தன், சீரியல் நடிகை தேவ பிரியா, காதல் சுகுமார், பால சரவணன் என சில காட்சிகளில் வந்துபோனாலும் அவரவருடைய ரோலை நிறைவாக்கியிருக்கிறார்கள்.

கிளாப்ஸ்

எளிமையான கதையாக இருந்தாலும் ஒரு அழகான படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

சிரிப்பை திணிக்காமல் இயல்பாக வரவைக்கும் யோகி பாபுவுக்கு கண் மூடி கைதட்டலாம்.

எடிட்டிங், ஒளிப்பதிவு செய்தவிதம் எல்லாம் கூலிங் பேக்கேஜ் போல.

சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடியுள்ள அபிமானியே படத்திற்கு கிரெடிட்.

கேட்கும் படியாக ஒரிரு பாடல்கள், கேட்கும்படியான இசையமைப்பு.

பல்பஸ்

இயக்குனர் இன்னும் ஒரு அழுத்தமான கதையை கொடுத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

அப்பா வருவார் என்பதற்காக அருள்வாக்கு சொல்லும் பெண்ணின் லாஜிக் செட்டாகவில்லை.

பெரிதளவில் சண்டைகளை படத்தில் பார்த்த நமக்கு இப்படம் இவ்வளவு தானா என கேட்கவைக்கும்.

மொத்தத்தில் என் ஆளோட செருப்ப காணோம் படம் தேடி வந்தவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். குடும்பத்துடன் பார்க்க ஒரு முழு எண்டர்டெயின்மெண்ட். சரி நீங்க செருப்ப தொலைச்சிடாதீங்க.

No comments

Powered by Blogger.