அரச ஊழி­யர்­க­ளுக்கு அரசாங்கம் வைத்த ஆப்பு!!

நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் நாளை 9ஆம் திகதி முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மூன்­றா­வது வரவு –செல­வுத்­திட்­டத்தின் ஊடாக அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள உயர்வு இருக்­காது என்றும் வாக­னங்­களின் விலை­களில் மாற்றம் வரும் என்றும் நிதி­ய­மைச்சு வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கின்­றது.
மேலும் வடக்கு,கிழக்கு மாகா­ணங்­களில் முத­லீடு செய்­வோ­ருக்கு 200வீத வரிச்­ச­லு­கையை தொடர்ந்தும் உயர்ந்த மட்­டத்தில் முன்­னெ­டுப்­ப­தற்கும் மலை­க­யத்தில் வீட­மைப்பு வேலைத்­திட்­டத்தை துரி­தப்­ப­டுத்­தவும் அடுத்த வரு­டத்­திற்­கான வரவு, செல­வுத்­திட்­டத்தில் யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மூன்­றா­வது வரவு, செல­வுத்­திட்டம் நாளை வியா­ழக்­கி­ழமை பிற்­பகல் 1 மணிக்கு நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

பகல் 1 மணி­ய­லி­ருந்து மாலை 4 மணி­வரை வரவு, செல­வுத்­திட்ட உரை நிதி அமைச்­ச­ரினால் வாசிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
அந்­த­வ­கையில் இம்­முறை வரவு, செல­வுத்­திட்­ட­மா­னது பச்சை நீல எண்­ணக்­க­ருவை கொண்­டி­ருக்கும் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அதா­வது பொரு­ளா­தார ரீதியில் நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பும்­போது சுற்­றா­டலை பாது­காக்­க­வேண்­டி­யதை பச்சை என்ற எண்­ணக்­க­ருவின் ஊடா­கவும், கடல் சார் பொரு­ளா­தா­ரத்தை முன்­னேற்­று­வதை நீல என்ற கரு­வூ­டா­கவும் இம்­முறை வரவு, செல­வுத்­திட்­டத்தில் உட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக நிதி அமைச்­சின தகவல் தெரி­விக்­கின்­றன.

இதே­வேளை சிறிய அள­வி­லான வாக­னங்­களின் விலை­களில் மாற்றம் இருக்­காது என்றும் எனினும் பெரி­ய­ள­வி­லான வாக­னங்­களின் விலை­களில் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­படும் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அது­மட்­டு­மன்றி மாண­வர்­க­ளுக்­கான 13 வருட கட்­டா­யக்­கல்வி நடை­முறை இம்­முறை வரவு, செல­வுத்­திட்­டத்தின் ஊடாக ஒரு யோச­னை­யாக முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. அத்­துடன் எரி­பொருள் விலையில் எவ்­வி­த­மான மாற்­றமும் இம்­முறை வரவு, செல­வுத்­திட்­டத்தில் இருக்­காது என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மது­பான விலை­க­ளிலும் பாரிய அளவு மாற்றம் இருக்­காது என அறி­ய­மு­டி­கின்­றது.

அத்­துடன் அரச ஊழி­யர்­க­ளுக்­கான சம்­பள உயர்வு இம்­முறை வரவு, செல­வுத்­திட்­டத்தில் உள்­ள­டக்­கப்­ப­டாது எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. காரணம் புதிய நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்­ததும் அரச ஊழி­யர்­க­ளுக்­கான சம்­ப­ளத்தை 10 ஆயிரம் ரூபா­வினால் அதி­க­ரித்­ததால் எனவே அடுத்த வரு­டமும் அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள உயர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­ட­மாட்­டாது என்றும் தெரி­ய­வ­ரு­கி­றது.

மேலும் தனியார் துறை­யி­னரின் சம்­பள உயர்வு தொடர்­பிலும் எந்­த­வி­த­மான யோச­னை­களும் இடம்­பெற மாட்­டாது என்றே நிதி­ய­மைச்சின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இதே­வேளை வடக்கு, கிழக்கில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தொழில் வாய்ப்­புக்­களை உரு­வாக்கிக் கொடுக்கும் நோக்கில் பல்­வேறு திட்­டங்­க­ளுக்­கான யோச­னைகள் முன்­வைக்­கப்­ப­டலாம் என தெரி­ய­வ­ரு­கி­றது.

அதா­வது வடக்கு, கிழக்கில் முத­லீடு செய்­ப­வர்­க­ளுக்கு 200 வீத வரிச்­ச­லு­கையை வழங்­கு­வ­தற்­கான கடந்த வருட யோசனை இம்­மு­றையும் மிகவும் வலு­வான முறையில் முன்­வைக்­கப்­ப­டு­மென தெரி­ய­வ­ரு­கி­றது.

இது இவ்­வா­றி­ருக்க மலை­ய­கத்தில் வீட்­டுப்­பி­ரச்­சினை பாரிய விவ­கா­ர­மாக உரு­வெ­டுத்­துள்ள நிலையில் மிக விரை­வாக பெருந்­தோட்­டங்­களில் தனி­வீட்­டுத்­திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்­கான யோச­னை­களும் இம்­முறை வரவு,செல­வுத்­திட்­டத்தில் இடம்­பெறும் என நிதி அமைச்சின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இதேவேளை மிகப்பெரிய அளவில் இம்முறை நிவாரணங்கள் எதுவும் வரவு, செலவுத்திட்டத்தில் இடம்பெறாது என்றும் மக்களின் முயற்சிகளுக்கு ஊக்குவிப்பு வழங்குவதற்கான யோசனைகளே இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கக்கூடியதும் மற்றும் நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டதாக அடுத்த வரவு செலவுத்திட்டம் அமையும் என நிதி அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.