மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியகல்லூரியின் வருடாந்த ஒளிவிழா.

(க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வருடாந்த ஒளி விழா செவ்வாய்க்கிழமை(7.11.2017) காலை 9.00 மணியளவில் பாடசாலையின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் காட்மண்ட் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக்குரு அருட்சகோதரர் ஜே.டவூல்யூ.யோகராசா,அமிர்தகழி கப்பலேந்தி திருச்சபையின் பங்குத்தந்தை சீ.வீ.அன்னதாஸ்,செங்கலடி மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக்குரு அருட்சகோதரர் ஷாம் சுவேந்திரன்,வலயக்கல்வி அலுவலகத்தின் தொழில் வழிகாட்டல் மற்றும் உளவியல் உளவளத்துணை உத்தியோகஸ்தர் அழகையா-ஜெயநாதன் ஆகியோர்கள் கௌரவ அதிதிகளாகவும்,மற்றும் பிரதி அதிபர்களான இராசதுரைபாஸ்கர்,கே.சசிகாந்,உபஅதிபர்களானஎஸ்.லோகராசா,எஸ்.சதீஸ்வரன்,பழையமாணவசங்கத்தலைவர் எஸ்.சசிதரன்,ஆசிரியர்கள்பெற்றோர்கள்,மாணவர்கள்,கலந்துகொண்டார்கள்.

இந்தஒளிவிழாநிகழ்வில்மங்களவிளக்கேற்றல்,தலைமையுரை,ஆசியுரை,கிறிஸ்தவ சமயத்தை பிரதிபலிக்கும் கலைநிகழ்வுகள்,தேவ செய்திகள்,கிறிஸ்து பிறப்பின் முக்கியத்துவம்,அதிதிகள் உரை,பரிசுவழங்கள் என்பன நடைபெற்றது.
 

Add caption
 

No comments

Powered by Blogger.