சாதனை வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்!!குஞ்சுக் குளம் வரலாற்றில் பொறிக்கப்பட்டது வைரமுத்திரை!!

கிளி/மத்திய ஆரம்பப் பாடசாலையில் நடைபெற்ற 12 வலயங்கள் பங்குபற்றிய செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு மாகாணமட்டம் 2017 இல் பாடசாலை மன்/பெரிய குஞ்சுக்குளம் R.c.t.m.s பாடசாலையின் தரம் - 03 பயிலும் பெண்கள் அணியினர் பங்குபற்றி 3ஆம் நிலையை தமதாக்கியதுடன், தேசியமட்டப் போட்டிக்கும் தெரிவாகியுள்ளார்கள்.

இந்த பொன்னான மகிழ்வான தருணம் பற்றி பயிற்றுவிப்பாளர் கருத்துக் கூறுகையில்

மிகவும் பின்தங்கிய வசதி வாய்ப்பற்ற ஒரு சிறு கிராமத்திலிருந்து பலத்த போட்டிகளின் மத்தியில் தமது அயராத முயற்சியினாலும், இடைவிடாத பயிற்சியினாலும் இன்று சாதித்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு பயிற்சி வழங்கினேன் என்ற ரீதியில் என்னையும் பெருமைப்பட வைத்ததுடன், பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கிறார்கள் இந்த இளஞ்சிட்டுக்கள். 


எனக் குறிப்பிட்டார் வேலணையூர் ரஜிந்தனவர்கள்

நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் வீரங்கனைகளே.

No comments

Powered by Blogger.