களுவாஞ்சிகுடி கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட வீதிகள் எதுவித புனரைமைப்பும் இல்லாமல் காணப்படுகின்றது.

(வெல்லாவெளி நிருபர் -க.விஜயரெத்தினம்) 
 
மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி கிராமத்தில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட உள்ளூர் வீதிகள் எதுவித புனரமைப்பும் இன்றி சேதமடைந்துள்ளது.
 
களுவாஞ்சிகுடி கிராமத்தில் உள்ள வீதிகள் பல மணல்வீதியாகவும்,களிமண் வீதியாகவும் காணப்படுவதால் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து செய்ய முடியாமல் உள்ளது.பழம்பெரும் கிராமமாக திகழும் களுவாஞ்சிகுடி கிராமத்தில் உள்ள வீதிகள் நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாமல் உள்ளதாக களுவாஞ்சிகுடி பொதுமக்கள்,கிராமத்தில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கவலை தெரிவிக்கின்றார்கள்.

கிராமத்தில் உள்ள உள்ளூர் வீதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதனால் பாரியதொரு சுகாதாரப்பிரச்சனை நிலவுகின்றது.வீதிகளில் மழைநீர் தேங்கி நிற்காமல் வழிந்துசெல்லக்கூடிய வடிகாண்களுடன் கூடிய வீதிகளை புனரமைப்பு செய்துதர வேண்டும்.களுவாஞ்சிகுடி கிராமத்தில் உள்ள வீதிகளை துரிதகதியில் புனரமைப்பு செய்வதற்கு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர்,களுதாவளை பிரதேசசபைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைக்கின்றார்கள்.
 
 

No comments

Powered by Blogger.