அசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் அழகானார்

கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட அசிட் தாக்குதலை அடுத்து, இளம்பெண் ஒருவர் சிகிச்சைகளின் பின்னர் மீண்டும் அழகாக மாறியிருக்கும் புகைப்படத்தை வௌியிட்டுள்ளார்.
இங்கிலாந்தின் கிழக்கு லண்டனைச் சேர்ந்தவர் ரேஷம் கான் (21).

இவர் தனது உறவினர் ஜமீல் முக்தருடன் கடந்த ஜூன் மாதம் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர், இருவர் முகத்திலும் அசிட் வீசியுள்ளார்.

இதில் ரேஷம் கானின் முகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு தீவிர மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

சம்பவம் தொடர்பாக ஜான் டொம்லின் என்பவரை பொலிசார் கைது செய்தனர்.

அசிட் வீச்சிற்கு பின்னர் தான் அனுபவிக்கும் வலிகள் மற்றும் வேதனைகள் குறித்து ரேஷம் கான் சில மாதங்களுக்கு முன்னர் விபரித்திருந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரேஷம் கானின் புகைப்படங்கள் வெளிவந்ததே தவிர, அதன் பிறகான புகைப்படங்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து மீண்டும் அழகுப்பதுமையாக காட்சியளிக்கும் தனது புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, அவரின் போராட்ட குணத்தையும் தன்னம்பிக்கையையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.