செங்கலடியில் இன்று காலை உழவு இயந்திரத்தில் சிக்கி ஏழைக்கூலி தமிழ் இளைஞர் உயிரிழப்பு!

இன்று காலை 8.20 மணியளவில் செங்கலடி பகுதியிலுள்ள தோடிச்சோலை ஆற்றில் மண் ஏற்றி வரும் போது கொடுவாமடு தம்பானவெளி பகுதியை சேர்ந்த லவன் 17வயது இளைஞன் உழவு இயந்திர ஓட்டுனரின் அருகிலுள்ள முன் மக்காட்டில் அமர்ந்திருந்த வேளை சடுதியாக சறுக்கி விழுந்த போது அவ் இளைஞரின் இதயம் சார்ந்த நெஞ்சுப்பகுதியை சுமை கூடிய உழவு இயந்திரத்தின் டயர் ஏறி மிதித்ததால் அவ்விடத்திலே இளைஞர் மரணமடைந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

இவ் குறித்த இளைஞர் குடும்பம் மிகவும் வறுமையான கூலித்தொழில் செய்து அன்றாடம் சீவியம் நடத்தும் குடும்பமாகும். இப்படியான உயிராபத்துகள் எமது கவனயீனமாக நடவடிக்கையால் ஏற்படுகின்றமை வருந்த தக்க விடயமாகும். அத்தோடு கற்க வேண்டிய வயதில் பாடசாலை செல்லாமல் தம்மை நம்பியுள்ள குடும்பத்தின் வாழ்வாதரத்தை காப்பாற்ற கடினமான கூலித்தொழிலை செய்யும் போது உயிரிழப்பது கொடிய வேதனையாக உளள தமிழ் மக்களின் சூழ்நிலையை எடுத்துக்காட்டுகின்றது.

 

No comments

Powered by Blogger.