மட்டு – புதுக்குடியிருப்பு கடலில் படகு கவிழ்ந்ததில் இரு மீனவர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பினார்கள்!

                                                                                           - செ.துஜியந்தன் -
மட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு கடலில் கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் ஒருவரின் படகு கவிழ்ந்ததினால் படகில் சென்ற அம் மீனவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன் அப் படகு கடலில் மூழ்கியுள்ளது. 

இச் சம்பவம் சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த படகு உரிமையாளர் பிரபாகரன், மீனவர் தயாபரன் ஆகியோர் சனி மாலை 6.30 மணியளவில் கற்றொழிலுக்குச் சென்றுள்ளனர். கடலில் மீன்பிடித்து விட்டு இரவு 9.30 மணியளவில் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தவேளையில் திடீரென ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு காரணமாக படகு கவிழ்ந்துள்ளது. 

எதிர்பாராது நடந்த இச்சம்பவத்தில் இவ் இரு மீனவர்களும் தெய்வாதீனமாக நீந்திக் கரை சேர்ந்துள்ளனர். அவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கியுள்ளது. இதனால் படகு உரிமையாளர் பிரபாகரனுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான படகு கடலுக்குள் மூழ்கியுள்ளது. இம் மீனவர் அப் படகினை கொள்வனவு செய்து இரு நாட்களே ஆகின்ற நிலையில் இச் சம்பவம் நடந்துள்ளது. பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளார். 

கடந்த சில தினங்களாக கிழக்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
No comments

Powered by Blogger.