போர்க்குற்றம் தொடர்பான தருஸ்மன் அறிக்கை பொய்

இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்வைத்துள்ள புள்ளி விபரங்கள் சரியானவை அல்ல என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லோர்ட் நெஸ்பி தெரிவித்துள்ளார்.
கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தருஸ்மன் அறிக்கையை அடிப்படையாக கொண்டு சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை.

தருஸ்மன் அறிக்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டாலும் அது உண்மையல்ல எனவும் சுமார் 7 ஆயிரம் பேரே கொல்லப்பட்டதாகவும் லோர்ட் நெஸ்பி குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.